ஈஸ்டர் தாக்குதல் உட்பட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இடம் பெற்ற பல கொலைகள் குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்க முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உட்பட மேலும் சிலருக்கு தொடர்புகள் இருப்பதாக தற்போது கைது செய்யப் பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண முன்னாள் கலைப்பீட பிடாதிபதி முன்னாள் துணைவேந்தர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 9 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு வழங்கப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொலநறுவை சிங்கபுரவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் காலத்தில் இன்னொரு வகை முகாம் நடத்தப்பட்டு வந்ததாகவும் இங்கு அரசியல் எதிரிகள் பலர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சித்திர வதை செய்யப்பட்டதாகும் பிள்ளையானின் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை காண்பதற்கு குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதே வேளை மேற்படி கொலை மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட முன்னால் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் விரைவில் கைதாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.