தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17)யோகசுவாமி இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்சி இடம்பெற்றது.

தொடந்து கற்றல் உபகரணங்கள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக 23 ஆவது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுபாத் சஞ்ஜீவ, 232 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி கேர்ணல் சமிந்த கருணாரத்ன,லயன் கே.லோகேந்திரன்,சந்திவெளி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரி.தசநாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான நிதி அனுசரணையை மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







