கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதோடு மேலும் 100 பேர் காணாமலாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர்.

இதேவேளை படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதோடு மேலும் 100 பேர் காணாமலாகியுள்ளனர்.
அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதேவேளை விபத்தில் இருந்து தப்பிய 100 பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.