பெரகல-வெல்லவாய வீதியின் விகாரகல பகுதியில் (184 கிலோமீற்றர் தொலைவில்) மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த வீதியை சுத்தப்படுத்துமாறு பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
எல்ல-வெல்லவாய வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



