முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நடவடிக்கைக்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அனுராதபுரம் நகர மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
அத்தோடு, இந்த ஆண்டு இரண்டாயிரம் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார, அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் குழுவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.