மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று (20) காலையில் இடம்பெற்றது.
இன்று உயிர்த ஞாயிறு தினத்தையிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன், தேவாலயங்களில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து பாதுக்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் இலங்கையின் சில இடங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சஹ்ரான் காசிம் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், மட்டு சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது.

