தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திற்கு பத்து இலட்சம் பெறுமதியான தள பாடங்கள் கையளிப்பு நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு தேவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவ திரு. சிறிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு சார்பாக விடிவெள்ளி சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது தொடர்ந்து அதிபர் அவர்களின் தலைமை உரையில் பாடசாலையில் பல வருடங்களாக நிலவிய தளபாட பற்றாக்குறைய விடிவெள்ளி சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் கூறிய வேளையில் அதனை கவனத்தில் கொண்டு அவர்கள் கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்களையும் கை கொடுக்கும் உதவும் கரங்கள் அமைப்பினரையும் சந்திரகாந்தி foundation அமைப்பினரையும் தொடர்பு கொண்டு மூன்று அமைப்பினரும் இணைந்து சுமார் 10 லட்சம் பெறுமதியான தளபாடங்களை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியதாக குறிப்பிட்டார்.
அதில் 40 A type கதிரை மேசைகள் B type 40 கதிரை மேசைகள் A type 10 கதிரை மேசைகள் திருத்தி தந்ததுடன்
teachers table chair 6 உம் பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டார்.

அந்த வகையில் இதனை வழங்கிய கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்களுக்கும் உதவும் கரங்கள் அமைப்பினருக்கும் சந்திர காந்தி foundation அமைப்பினருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
இந்த அன்பளிப்பினை தொடர்ந்து மாணவர் நலன் கருதி பாதுகாப்பதாகவும் உறுதி அளித்தார் அத்துடன் விடிவெள்ளி சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய விடிவெள்ளி சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு மேவின் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகையில் இப்பாடசாலையின் அதிபர் அவர்களினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொண்டும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைவதையும் அவதானித்து இப்ப பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் கரங்கள் அமைப்பின் செயல்பாட்டாளர் கௌரவத்திற்குரிய பிரபா ஐயாவிடம் தெரிவித்த வேளையில் உடனடியாக கொக்குவில் பழைய மாணவர்களையும் சந்திரகாந்தி பவுண்டேஷனையும் உதவும் கரங்கள் அமைப்பினரையும் இணைத்து இதனை பெற்றுக் கொடுக்க முன் வந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் மாணவர்கள் ஊக்கத்துடன் கல்வியைக் கற்று எதிர்காலத்தில் சொந்த காலில் சுயமாக வாழ ஏற்ற தொழில்களை பெற வேண்டும் எனக் கூறியதுடன், தேற்றா தீவு மண்ணில் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை வெகு விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் இச்செய்திட்டத்திற்கு பல வழிகளிலும் உதவிய பிரபா ஐயாவை வெகுவாக பாராட்டியதுடன் k H C குழு helping hand chandrakanthi foundation ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் வலயக் கல்விப் பணிப்பாளரின் விசேட உரை இடம் பெற்றது இதில் தற்காலத்தில் இப்பாடசாலை சமூகங்களை ஒன்றிணைத்து முன்னெறி வருவதாகவும் அந்த வகையில் இப்பாடசாலைக்கு உதவ முன் வந்த கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்களுக்கும் சந்திரகாந்தி பவுண்டேஷன் அமைப்பினருக்கும் கை கொடுக்கும் உதவும் கரங்கள் அமைப்பினருக்கும் வலையத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்து கொண்டதுடன் விடிவெள்ளி அமைப்பினரையும் பாராட்டினார்.
அத்துடன் இவ்வாறான திட்டங்கள் பலவற்றை எதிர்பார்த்து பல பாடசாலைகள் உள்ளதாகவும் அவற்றிற்கும் உதவுவதற்கு இவ் அபைப்பினர் முன் வர வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்ததுடன் தள பாடங்களை அதிபர் ஆசிரியர் மாணவர்களிடம் கையளித்தும் வைத்தார். அத்துடன் நன்றியுரைடன்
நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.












