பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போப் பிரான்சிஸ் நேற்றையதினம் வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார்.

மறைவின் போது அவருக்கு வயது 88.
நேற்றையதினம்(21), உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. போப் பிரான்சிஸ் பக்கவாதத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாகவும் உயிரிழந்தார் என்றும் வாடிகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவையடுத்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை வத்திக்கானின் இடைக்கால தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் பணியாற்றுவார் என்று திருச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அயர்லாந்தில் பிறந்த ஃபாரெல், அமெரிக்காவில் நீண்ட உறவுகளைக் கொண்டுள்ளார். வத்திக்கானின் கூற்றுப்படி, டல்லாஸ் மறைமாவட்டத்தின் பிஷப்பாகவும், வாஷிங்டன் டிசி மறைமாவட்டத்தின் துணை பிஷப்பாகவும் கெவின் ஃபாரல் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு உலக நாடுகள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.