கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரொருவரை கடத்திச் சென்று காணாமலாக்கிய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் இருக்கின்றன. ஆனால் பிள்ளையான் இந்தக் குற்றத்தை மாத்திரம் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த காலத்தில் கொலைகளை செய்திருக்கிறார். ஆனால், அதன் பின்னரும் பல்வேறு ஒப்பந்தங்களுக்காக பிள்ளையான் பல்வேறு கொலைகளை செய்துள்ளார்கள். குற்றங்களையும் செய்துள்ளார். எனவே, பிள்ளையான் பல்வேறு குற்றச்செயல்களில் முக்கியமானவராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
பண்டாரவளையில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாங்கள் எப்போதும் பொய் கூறியதில்லை. எங்களால் முடிந்த விடயங்களை மாத்திரமே நாங்கள் கூறியிருக்கிறோம். நாங்கள் கூறிய விடயங்களை கட்டாயம் நிறைவேற்றியே தீருவோம். அவற்றை நிறைவேற்ற ஆரம்பித்தும் இருக்கிறோம். எமது அரசியல் வரலாற்றில் பொய்யை மாத்திரம் கூறிய வரலாறும் இருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும், அரசியல் பழிவாங்கல் இடம்பெறுமென தேர்தல் காலத்தில் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்கள். ஆனால் இதுவரையில் அப்படியொன்றும் இடம்பெறவில்லை. அவர்களே பொய் கூறியிருக்கிறார்கள். இரு தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளோம்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரொருவரை கடத்திச் சென்று காணமலாக்கிய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் இருக்கின்றன. ஆனால் பிள்ளையான இந்தக் குற்றத்தை மாத்திரம் செய்யவில்லை.
தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்திருந்த காலத்தில் இடம்பெற்ற அரந்தலாவ பிக்கு கொலை, பொலிஸ் அதிகாரி கொலை போன்ற சம்பங்களை கணக்கில் கொள்ளாவிட்டாலும் அதன் பின்னர் பிள்ளையான் பல்வேறு ஒப்பந்தங்களுக்காக கொலைகளை செய்துள்ளார்கள். குற்றங்களையும் செய்துள்ளார். எனவே, பிள்ளையான பல்வேறு குற்றச்செயல்களின் முக்கியமானவராவார்.
அவரை கைதுசெய்து 90 நாட்களுக்க தடுத்து வைத்துள்ளோம். பிள்ளையானுக்கு கதைப்பதற்கு நிறைய நாட்கள் இருக்கின்றன. பிள்ளையானை விசாரிப்பதற்கு பொலிஸாருக்கும் அதிக நாட்கள் இருக்கின்றன. தற்போது ரணில் விக்கரிமசிங்க, மஹிந்த ராஜபக்ச,உதய கம்மன்பில, ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் பயந்து பிள்ளையானை பாதுகாக்க ஒன்று திரண்டுள்ளனர்.

பிள்ளையானை தேசத்தின் வீரராகவும், யுத்த நெருக்கடி காலத்தில் பிள்ளையானே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாகவும் கூறுகிறார்கள். எதற்காக இவ்வாறு குழப்பமடைகிறார்கள்.
பிள்ளையான் வாயை திற்நதால் எவற்றை கூறுவார், இவர்கள் பெற்றுக்கொடுத்த ஒப்பந்தங்கள் வெளிவந்துவிடுமோ என்று பயந்துள்ளார்கள். பிள்ளையான் இரகசிய பொலிஸாரிம் என்ன கூறினார் என்பதை அறிந்துகொள்ளவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்காகவே, பிள்ளையானுக்கு ரணில் தொலைபேசி அழைப்பும் விடுத்துள்ளார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் நெருங்கிய உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் மாத்திரமே பிள்ளையானை சந்திக்க முடியும். அதனாலேயே அந்த பணியை உதய கம்மன்பிலவிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
உதய கம்மன்பில சட்டத்தரணி என்பது உண்மை. ஆனால் இதுவரையில் வழக்கு வாதாடியது இல்லை. தற்போதே முதல் முறையாக பிள்ளையானின் வழக்கை வாதாட போகிறார்.

பிள்ளையான் அழுததாக உதய கம்மன்பில கூறுகிறார். பிள்ளையானின் வழக்கை உதய கம்மன்பில வாதாடுவது நினைத்து அவர் அழுதிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. உதய கம்மன்பில கூறுவது போன்று பிள்ளையானை சந்தித்தபோது அருகில் பொலிஸார் நால்வர் இருந்திருப்பார்கள் என்றால் எந்த விடயத்தை அவர்களால் கலந்தாலோசிக்க முடியாமல் போனது. அதனால் ஏற்பட்ட தடை என்ன வென்பது புரியவில்லை.
ஆனால், பொலிஸாரின் மத்தியில் உதய கம்மன்பிலவால் பிள்ளையானிடம் அதனையும் கூறிவிட்டீர்களா என்று வினவ முடியாது. எங்களைபற்றி என்ன கூறினீர்கள் என்றும் கேட்க முடியாது. பிள்ளையானினூடாக அவர்களால் முன்னெடுக்கப்பட்ட குற்றங்களை தொடர்பில் பிள்ளையான் வாய் திறந்தால் ஒவ்வொருவரும் வரிசையாக சிறைக்குச் செல்ல நேரிடும் என்றார்.