புத்த துறவி வேடத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

புத்த துறவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வரிசை வழியாக தலதா மாளிகைக்குள் நுழைய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், கண்டி தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்தாது தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.