முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்பு அதிகாரத்தில் இருந்த கட்சிகளின் சார்பில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், பல்வேறு ஊழல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஒருசிலர் கடந்த அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு பெறுமதி கூடிய இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறானவர்களின் பட்டியலை எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளில் முன்னைய காலங்களில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து தற்போது தனியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.