2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நேற்று 29 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 210 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிமீறல் அடிப்படையில் சாதாரண தரமுடையவை எனவும், அநேகமான முறைப்பாடுகள் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.