ஆளுங்கட்சியின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும், இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஆளுங்கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாந்து போன பலருக்கும் தற்போது அரசியல் வெறுத்துப் போய்விட்டது.
அவர்கள் வாக்களிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளார்கள். ஆனால் ஆளுங்கட்சியின் வாக்குறுதிகளால் ஏமாந்தது போதும். இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, காலி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.