பாடசாலை பாடத் திட்டத்தில் தேர்தல் பாடங்களைச் இணைப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையகம் கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
பொது மக்களிடையே அரசியல் கல்வியறிவை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, தரம் 08 பாடத்திட்டத்தில் தேர்தல் கல்விகளை இணைக்க திட்டங்கள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச கல்வி முறையில் சிவில் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து போதுமான கவனம் செலுத்தப்படாததால், முறையான கல்வி மூலம் அரசியல் கல்வியறிவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.