நாட்டில் பெரியளவில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தி பரப்புரை செய்கின்றது. எனவே, விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல், இவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் இதை ஒரு சவாலாக அரசு எடுக்க வேண்டும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பொய்கள் மற்றும் வன்மங்களை விதைத்தே தேசிய மக்கள் சக்தி பிரச்சாரம் செய்தது. போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தற்போது ஆட்சி அதிகாரம் கிடைத்தும் பழைய பாணியிலேயே பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர்.
ஆட்சியும் உங்களிடம் உள்ளது. அதிகாரமும் உங்களிடம் உள்ளது.
எனவே, ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றிருந்தால், அவற்றை நிரூபித்துக் காட்டுங்கள்.
இதை ஒரு சவாலாக அரசுக்குக் கூறிக்கொள்கின்றோம். வேகமாக வளர்ச்சியடைந்த நாட்டை தேசிய மக்கள் சக்தியே நாசமாக்கியது. இதற்காக ‘பொய்’ எனும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது” – என குறிப்பிட்டுள்ளார்.