வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் முகமாக பல்வேறு பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது இன்று (01) காலை வேளை தோணி ஓட்டமும் மாலை வேளை சிறுவர், இளையோர் மற்றும் முதியோர்களுக்கான பல்வேறு பாரம்பரிய கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல்வேறு வர்ணங்களில் படகு, மயில், தாமரை மற்றும் பேருந்து வடிவிலான இல்லங்களை அமைத்து விளையாட்டு நிகழ்சிகளில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக போதகர் இலக்ஷ்மணன் மற்றும் வாகரை பிரதேச சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையமானது வாகரை பிரதேசத்தின் சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக வருடா வருடம் இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்து வருவது வழக்கமாகும்.













