முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின் எந்தவித கேள்வி கோரலும் இன்றி, ஒப்பந்தக்காரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு வேலைகளுக்காக சுமார் 119 கோடி 62 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில் 55 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபா அளவில் போலியான கொள்வனவுச் சீட்டு மற்றும் அதிகரித்த விலை கொண்ட கொள்வனவுச் சீட்டுகள் ஊடாக மோசடி செய்யப்பட்டுள்ளமை கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.