உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளது.
அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குதல் மற்றும் ஒரு நாள், பொது சேவைகள் வழங்குதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
குறித்த சேவைகள் மே 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படும்.
ஒரு நாள் சேவைக்காக இயக்கப்பட்ட 24 மணி நேர சேவை குறித்த நாட்களில் இயங்காது. என அறிவிக்கப்பட்டுள்ளது.