மட்டு ஆரையம்பதி பகுதியில் இன்றைய தினம் (04) மாலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குருநாகல் நோக்கி பயணித்த கார், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதி குறித்த விபத்து சம்பவம் சம்பவித்துள்ளது.
இதன் போது உயிராபத்துக்கள் ஏதும் நிகழவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



