கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் ஒரு இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.