மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாரவூர்தியும் அதன் சாரதியும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய 250 அரிசி மூடைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்த விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.