கிரேக்கத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாரிய முதலீடு செய்ததாக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை குறித்து அவசர விசாரணை நடத்தக் கோரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று வழங்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பதில் பணிப்பாளர் துசித ஹல் ஒலுவவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (04) நள்ளிரவு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை சட்டத்தரணி அகலங்க உக்வத்த தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.