உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
கந்தளாயில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
திருகோணமலையில், 13 பிரிவுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், வாக்குச்சாவடிகளைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.







