Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் ஹோட்டல் உரிமையாளரிடம் 30 ஆயிரம் இலஞ்சம் வாங்கி தலைமறைவான பொலிஸ் அதிகாரி கைது

மட்டு நகரில் ஹோட்டல் உரிமையாளரிடம் 30 ஆயிரம் இலஞ்சம் வாங்கி தலைமறைவான பொலிஸ் அதிகாரி கைது

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை மிரட்டி 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் தலைமறைவாகிய நிலையில், கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று (7) நகர்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் உப பொலிஸ் பரிசோதகர் கடந்த முதலாம் திகதி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சிவில் உடையில் சென்று அதன் முதலாளிக்கு உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதனால் கொழும்பில் இருந்து தன்னை சென்று சோதனையிடுமாறு தெரிவித்து அறைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் சோதனையிட்டு அவர்களை மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து தனக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் தருமாறு கோரிய நிலையில் தன்னிடம் இப்போது அந்த தொகை பணம் இல்லை எனவே 30 ஆயிரம் ரூபாதான் தற்போது உள்ளது என தெரிவித்த நிலையில் அதனை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக வாங்கி எடுத்துக் கொண்டார்.

குறித்த ஹோட்டலில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிய வீடியோ மற்றும் ஒலி வடிவங்களுடன் ஹோட்டல் உரிமையாளர் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரிடம் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பொலிஸ் உப பரிசோதகர் இதனையறிந்து உடனடியாக வாங்கிய 30 ஆயிரம் ரூபா பணத்தை அவருடன் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து அனுப்பி ஹோட்டல் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் உதவி பொலிஸ் மா அதிபரிடம் ஹோட்டல் உரிமையாளர் பணத்தை திருப்பி தந்த விவகாரத்தை தெரிவித்ததையடுது, இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் இலஞ்சம் வாங்கிய குறித்த பொலிஸை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் அவர் கடமைக்கு வராது தலை மறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் குறித்த உபபொலிஸ் பரிசோதகரை பணியில் இருந்து நேற்று முன்தினம் (5) இடை நிறுத்தியுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நிலையில் தலை மறைவாகி வந்த குறித்த நபரை இன்று (07) நகர்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.