யாழ் – மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு புதிய பதில் மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, புதிய பதில் மரண விசாரணை அதிகாரியாக நமசிவாயம் பிறேம்குமார் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் திடீர் மரணங்களுக்கான மரண விசாரணைகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை காலமும் கடமை புரிந்தார்.
இந்த நிலையில் மேலதிகமாக மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணி புரிவதற்கான நியமனம் வழங்கப்பட்டது.
நீதியமைச்சின் செயலாளரால் இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.