Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மற்றும் மண் லொறியை மறித்து மக்கள் ஆர்பாட்டம்- இருவர் கைதையடுத்து பெரும் பதற்றம்

வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மற்றும் மண் லொறியை மறித்து மக்கள் ஆர்பாட்டம்- இருவர் கைதையடுத்து பெரும் பதற்றம்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வு மேற்கொள்வதை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று (08) வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொலிசாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், பொலிசாரின் கைது நடவடிக்கையை எதிர்த்து சுட்டெரிக்கும் வெய்யிலில் தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணியடி ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்களினால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டதையடுத்து இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கடந்த முதலாம் திகதி குழிகளை தோண்டி மண் அகழ்வில் ஈடுபட்டதையடுத்து அங்கு சென்ற கிராம மட்ட அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மண் அழ்வில் ஈடுபட்டவர் தற்போது எங்களிடம் அனுமதி உண்டு என தெரிவித்து, பொலிசாருக்கு தெரிவித்த முறைப்பாட்டையடுத்து எதிர்ப்பு தெரிவித்த சிலரை பொலிசார் கைது செய்து, அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர். .

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு அகழ்ந்த மண்ணை ஏற்றிக் கொண்டு வேறு இடத்துக்கு கொண்டு சென்ற கனகர வாகனத்தை வீதியில் வழிமறித்து “எங்கள் கிராம மண் வளத்தை அழிக்காதே, மண் வளத்தை அழிக்கும் துரோகியே ஒழிக, சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு என சுலோகங்கள் ஏந்தியவாறு குறித்த திட்டத்தினை நிறுத்த கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிசாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழரசு கட்சி வேட்பாளர் மற்றும் இளைஞன் சென்று பேசிய நிலையில் அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் கைது செய்த இருவரையம் விடுதலை செய்யுமாறும் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர் நில அளவை சுரங்க பணியகம் மற்றும் மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்பு அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற திணைக்க ளங்களுடன் விசேட கலந்துரையாடல் இடம் பெற்று வரும் நிலையில், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வரை இந்த மண் அகழ்வை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இருந்தபோதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கு கொட்டகை அமைத்து அமர்ந்து தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழப்பு

தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.