இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு 3ம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்திற்காக பெற்ற வருமானம் மற்றும் மேற்கொண்ட செலவுகள் பற்றிய விவரங்களை தனித்தனியாக தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, போட்டியிட்ட மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்களிடம் இவ்வறிக்கைகள் கையளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் சிறிரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செலவுகள் மற்றும் வருவாய் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பில் சிக்கல்கள் உள்ளதாக, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்துள்ளார்.