Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!

அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!

1 year ago
in செய்திகள்

அருகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (9) ஆரம்பிக்கப்பட்டது.

ஆசியாவின் நான்காவது பெரிய கடல் பாறை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அருகம்பை பகுதியில் அமைந்துள்ளது.

நீர் சறுக்கல் முதலான விளையாட்டுக்களுக்கு ஏற்ற சூழலாக உள்ள காரணத்தினால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறுகம்பை விரிகுடா சுற்றுலாப் பகுதியை அதிகமாக விரும்புகிறார்கள்.

இலங்கை இராணுவத்தின் 24வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த கலப்பத்தியின் வழிநடத்தலில் இராணுவ வீரர்கள் அருகம்பை விரிகுடாவில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்புரவுப் பணியில் சுமார் 200 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதேவேளை அறுகம்பை சுற்றுலா காவல்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொத்துவில் பிரதேச சபை அதிகாரிகளும் இந்த துப்புரவுப் பணிகளில் இணைந்து செயற்பட்டனர்.

அத்துடன், அறுகம்பை கடற்கரைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டமை கவனிக்கத்தக்கது.

24ஆவது படைப்பிரிவின் துணைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக, 242வது படைப்பிரிவின் தளபதி கேணல் துஷார கேலே கோரலே, 14வது லயன்ஸ் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சுரேஷ் பெரேரா மற்றும் 24வது படைப்பிரிவின் சிவில் தொடர்பு அதிகாரி கேணல் சிசிர குமார ஆகியோரும் இந்த செயற்றிட்டப் பணிகளில் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தமிழரசு கட்சி கசிப்பு வாங்கியதா ஒருபோதும் இல்லை; சிறீதரன்

தமிழரசு கட்சி கசிப்பு வாங்கியதா ஒருபோதும் இல்லை; சிறீதரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு