Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

1 year ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் முதியோர் கொடுப்பனவு பெற சென்ற முதியவர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (14) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று (14) காலை முதியோர் கொடுப்பனவு பெற சென்ற முதியவர் கொடுப்பனவுக்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்துள்ளார்.

இதையடுத்து, அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் நேரம் செல்கின்றது என்னை மிக விரைவாக அனுப்பும் படி கோரியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் மற்றும் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபரொருவர் முதியோரை தமக்கு வாக்கு போடவில்லை என கடிந்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த நபர், தற்போது அஞ்சல் அலுவலக உத்தியோகத்தராக இருக்கும் நபரிடம் சென்று முதியவருக்கு கொடுப்பனவு கொடுக்க வேண்டாம் என கூறி சென்றுள்ளார்.

இதன்பின் தற்போது உத்தியோகத்தராக இருக்கும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்று முதியவர் தனது கொடுப்பனவை கோரியுள்ளார்.

இதன்போது குறித்த அஞ்சல் உத்தியோகத்தர், பல கீழ்த்தரமான வாத்தைகளை பயன்படுத்தி பேசியும் முதியோர் கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்தும் தனது சுயநல கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

கொடுப்பனவிற்காக 2km பயணம் செய்து வந்த முதியவர் தனது வாக்கினை குறித்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரருக்கு போடவில்லை என அவமானப்படுத்தி அனுப்பி சென்ற சம்பவம் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது ? இவ்வாறே தொடர்ந்து நடை பெற போகின்றதா என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி

மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு