திருகோணமலை வரோதயர் நகர் பகுதியில் மனித எலும்பு துண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது திருகோணமலை ஜின்னா நகர் பகுதியில் 70 வயது முதியோர் ஒருவரை கடந்த 10 நாட்களாக காணவில்லை என உப்பு வெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீட்கப்பட்ட குறித்த எலும்பு துண்டுகள் காணாமல் போனவரின் எலும்பு துண்டுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவரது மகள் தனது தந்தையுடையது என உறுதிப்படுத்தியுள்ளார்.

பின்னர் மீட்கப்பட்ட எலும்பு துண்டுகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.