தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) பிரதம நிறைவேறு அதிகாரி (CEO) சவீன் சேமகே , உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தனது பதவியை நேற்று (17) இராஜினாமா செய்துள்ளார்.
பொது சுகாதார நிபுணரான டாக்டர் சேமகே , ஜனவரி 2024 இல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
மருந்துகள் விலை நிர்ணயம் செய்வதிலும், பொது நிதியைச் சேமிக்க ஏகபோக நிறுவனங்களை உடைப்பதிலும் நான் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களாக NMRA மற்றும் மருந்துத் துறைக்குள் நிறைய பதற்றம் நிலவியது.எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன.” என்று டாக்டர் சேமகே தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மே 9 ஆம் தேதி, அவரது வீட்டில் உள்ள சிசிடிவியில், இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் அரை மணி நேரம் இரண்டு பேர் வீட்டை உடைத்து, சுற்றித் திரிவதைப் கேமரா பதிவு செய்திருந்தது. அவர்கள் டாக்டர் செமகே தூங்கிய படுக்கையறைக்குள் எட்டிப்பார்ப்பதைக் காண முடிந்தது. அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அந்த நேரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.