வத்தளை, ஜா – எல உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.