Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் வைத்தியதுறையின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (21) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் மற்றும் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் மதனழகன், சிறுநீரக சிகிச்சைப்பிரிவின் தலைவர் டாக்டர் முஜாஹீத் உட்பட இந்த சிகிச்சையில் பங்குகொண் வைத்திய நிபுணர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறுபட்ட சத்திரசிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றது. சிறிய, பெரியளவிலான சத்திரசிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றன.

ஒரு வருடத்திற்கு 10ஆயிரத்திற்கும் அதிகமான பெரியளவிலான சத்திர சிகிச்சைகளும் 12500க்கும் அதிகமான சிறிய சத்திசிகிச்சைகளும் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் இந்த மாதம் 15ஆம் திகதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப்பெற்று உரிய முறையில் இந்த மாற்று சிகிச்சை நடைபெற்று இன்று மாற்று சிகிச்சை பெற்றவர் வீடு செல்கின்றார்.

இந்த சிறுநீரக மாற்று சிகிச்சையினை ஒரு குழுவாக செய்து முடித்துள்ளனர். வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் கொழும்பு, அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோரின் அனுசரணையுடன் இந்த மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இது கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு மைல்கல்லாக இந்த அறுவை சிகிச்சை காணப்படுகின்றது. இதுபோன்ற சிகிச்சைகளை தொடர்ந்து செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
Next Post
மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு