Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 

இவ்வாறானதொரு மாற்றம் இந்த நேரத்தில் அவசியமற்றது அல்லது பொருத்தமற்றது என்பதே தமது சங்கத்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முறையே 63 மற்றும் 65 ஆகக் காணப்படும் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக இன்று (04) நடைபெற்ற பொது கலந்துரையாடல் மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரியவின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று கடந்த நாட்களின்போது ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிக்கும் ஆயத்தங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் கொழும்பில் விசேட பொது கலந்துரையாடல் மன்றமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் அச்சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
உயர்தர பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடு

உயர்தர பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு