நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு (11:15 ) மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 21 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.