வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை கையப்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் அரச அதிகாரிகளுடன் நேற்று (23) பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட
கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், தமது கொள்கையானது அனைத்து சமூகங்களுக்கும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.