ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
கத்தியால் தாக்கிய நபரை அங்கு இருந்தபொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் கைது செய்தனர்.