தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக கடுமையான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.