Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடு மீன் கிரிக்கெட் சமர் 2023 – சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வின்சன்ட் உயர்தர பாடசாலை!

பாடு மீன் கிரிக்கெட் சமர் 2023 – சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வின்சன்ட் உயர்தர பாடசாலை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற 10 வது பாடு மீன் கிரிக்கெட் சமரின் சம்பியன் கிண்ணத்தை வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் சுவிகரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள பரபல பாடசாலைகளான புனித சிசிலியா மகளீர் கல்லூரி அணியினருக்கும் வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை அணியினருக்கும் இடையில் சிநேகபூர்வமாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் பாடுமீன் கிரிக்கெட் சமர் இம்முறை 10 வது தடவையாக சனிக்கிழமை (12.08.2023) காலை முதல் மாலைவரை இடம்பெற்றது.

புனித சிசிலியா மகளீர் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட 20 ஓவர்களை கொண்ட மென்பந்து பாடுமீன் கிரிக்கட் சமரில் நாணய சுழற்சியை தமதாக்கி கொண்ட வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து 157 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்ட புனித சிசிலியா மகளீர் கல்லூரி அணியினர் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 20 ஓவர்களில் 153 ஓட்டங்களை பெற்ற நிலையில் வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை அணியினர் 3 ஓட்டங்களால் வெற்றியை தமதாக்கியுள்ளனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்.

இச்சமரின் சிறந்த பெண் வீராங்கனையாகவும் சமரின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாகவும் வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை அணியின் தலைவி சானுஜா கமலேஸ்வரன் தெரிவாகியதுடன்,

சமரின் சிறந்த பந்துவீச்சாளராக சிசிலியா பெண்கள் கல்லூரியின் வீராங்கனை ஈ.மெருஷா தெரிவாகியதுடன் இவர்களுக்கான கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த வின்சன்ட் அணியினருக்கும், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட சிசிலியா அணியினருக்குமான பணப்பரிசில் உள்ளிட்ட வெற்றி கிண்ணங்கள் இதன்போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி தவ திருமகள் உதயகுமார், இரண்டு பாடசாலைகளின் பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றேர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
Next Post
மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கரப்பந்து விளையாட்டுப்போட்டி!

மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கரப்பந்து விளையாட்டுப்போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு