முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மே மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, சுகயீனம் காரணமாக மே மாதம் 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மே மாதம் 28ஆம் திகதி மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், துமிந்த திசாநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








