மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்த ரவி குமுதேஷ், 2024 பொதுத் தேர்தலில் நிறுவன விதிகளை மீறி வேட்பாளராக போட்டியிட்டதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவலின் பேரில், இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், சம்பளத்தோடு பிற கொடுப்பனவுகளும் ரவி குமுதேஷ்க்கு வழங்கப்படமாட்டாது எனவும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த நடவடிக்கையை விமர்சித்த ரவி குமுதேஷ், தன்னை இடைநீக்கியதற்கான எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். “பணி இடைநீக்கம் தொடர்பான கடிதம் ஊடக நிறுவனங்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டிருப்பது பரிதாபகரமானது,” எனவும், “இது சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவால் மேற்கொள்ளப்படும் மிரட்டும் முயற்சி” எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.








