பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார்.
அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார். அதன்போதே, ஆசிரியர் மாணவியை பாலியல் வன்புனர்விற்குட்படுத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.