திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்தழித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது என்று அந்தப் பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லடியில் உள்ள மலைநீலி அம்மன்
ஆலயத்தின் காணிகள் தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது பௌத்தத்துக்கு உரியதாக உரிமை கோரிஅப்பகுதியில் விகாரைஅமைக்கப்படுகிறது. இதேவேளை, யுத்தத்தால் இடம்பெயர்ந்தமக்கள் 2007ஆம் ஆண்டுமீள்குடியமர்ந்தபோதுஅந்த ஆலயம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆலயத்தின் இடிபாடுகளை அகற்றி அம்மனின் விக்கிரகம் வீதியில் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.