மறைகாட்சித் தொழில்நுட்பத்தைக் கொண்ட கண்ணாடி தயாரிப்பில் முக்கிய பெயராக இருக்கும் Oakley நிறுவனம், சமூக ஊடகப் பரப்பலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் மெட்டாவுடன் இணைந்து, புதிய AI தொழில்நுட்பக் கண்ணாடியை விற்பனைக்கு களமிறக்கியுள்ளது.
இந்த உயர் தொழில்நுட்பக் கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் திறனுடன் கூடிய கேமரா, மைக்ரோபோன், மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இது வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, எனவே வெவ்வேறு வானிலை சூழ்நிலைகளிலும் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடியதாகும்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளிவிளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் தொடர்ச்சியாக செயல்படும் திறன் கொண்டது.
இந்தக் கண்ணாடியின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,18,058 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








