Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணிகளை, மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில் மேற்கொள்வதற்கு நாயாறுப்பகுதியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு அங்கு அத்துமீறிக் குடியிருக்கின்ற பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் கடற்றொழில் செய்வதற்கு இறங்குதுறை கேட்டால், கடலைப் பிரதானமான வாழ்வாதாரமாக நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள் எங்குசெல்வது.

கடல்பகுதியே இல்லாத வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கின்றவர்களை கடற்றொழிலாளர் சங்கமாகப் பதிவுசெய்தது யார்?. அவர்கள் நன்நீர் மீன்பிடிச் சங்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பின் கடலில் இறங்குதுறை கேட்கமுடியாது. – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

September 15, 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
Next Post
மட்டக்களப்பில் இரு பெண்கள் உட்பட 5 பேரால் தாக்கப்பட்ட பொலிஸார்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மட்டக்களப்பில் இரு பெண்கள் உட்பட 5 பேரால் தாக்கப்பட்ட பொலிஸார்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு