Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகளை நேற்று (6) பகல் கைது செய்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் பொதிசெய்யும் இயந்திரம், நிறுவை தராசு போன்றவைகளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ்.ஆப்தீன் தலைமையில், பொலிஸ் பரிசோதகர் அனுர, பொலிஸ் கொஸ்தாப்பரர்களான முனசிங்க, மென்டிஸ், சியாம், மானவடு, குமார, என்நாயக்கா கொண்ட குழுவினர், சம்பவதினமான நேற்று பகல் அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் இருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது 84 கிராம் 620 மில்லிக்கிராம் மற்றும் 31 கிராம் 50 மில்லிக்கிராம் மற்றும் 24 கிராம் 94 மில்லிக்கிராம் ஆக 140 கிராம் ஐஸ் போதைப் பொருளை 3 பேரிடமிருந்து மீட்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

இதில் 84 கிராம் 620 மில்லிக்கிராமுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடையவர் 2007ம் ஆண்டு குற்றசாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 40,36,40 வயதுடைய மூன்று பேரும் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
பாவனையற்று கிடக்கும் தொடருந்து பெட்டிகளை ஏலத்தில் விற்க தீர்மானம்

பாவனையற்று கிடக்கும் தொடருந்து பெட்டிகளை ஏலத்தில் விற்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு