கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் பெறும் நிலை அதிகரித்துள்ளதாகவும், அது தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாகவும் அங்கு யாத்திரை சென்ற பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் இந்த காலப்பகுதியில் கதிர்காம மலை ஏற செல்லும் பொதுமக்கள் இதை அவதானித்துள்ளனர்.

அதேசமயம் கடந்த 01.06 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்தல் மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு வேலை உள்ளிட்ட ஆபத்தான வேலைகளில் பணியமர்த்துவதை முற்றிலுமாக தடை செய்யும் தற்போதைய சட்ட விதிகளை கடுமையாக செயல்படுத்த அமைச்சரவை அண்மையில் அனுமதியளித்திருந்தது.
இருந்த போதிலும் அந்த பகுதியில் பொலிஸார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இருந்தும் அந்த சிறுவர்கள் தொடர்பில் சரியான ஒரு தீர்மானத்தை பெற்று, அவர்களுக்கான ஒரு சிறந்த எதிர்காலத்தை அமைக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காமல், கண்டும் காணாதது போல் இருப்பது கவலையளிப்பதாக அங்கு சென்ற பொதுமகன் ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்.









