Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறட்சியால் 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2,11,000 பேர் பாதிப்பு!

வறட்சியால் 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2,11,000 பேர் பாதிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் 21 ,999 குடும்பங்களை சேர்ந்த 70,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சங்கானை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அராலி, பொன்னாலை பகுதிகளில் சிறு கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பிடிக்கப்படும் இறால், நண்டு, சிறு மீன்களின் அளவு வெகுவாக குறைவடைந்துள்ளமையினால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் 952 குடும்பங்களை சேர்ந்த 3244 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 685 பேரும் வவுனியாவில் 450 குடும்பங்களை சேர்ந்த 1120 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, வட மாகாணத்தில் வறட்சியால் 23 ,603 குடும்பங்களை சேர்ந்த 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 18,951 குடும்பங்களை சேர்ந்த 63,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8892 குடும்பங்களை சேர்ந்த 29,508 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 7739 குடும்பங்களை சேர்ந்த 25,891 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2320 குடும்பங்களை சேர்ந்த 7737 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மேல் மாகாணத்தில் 5219 குடும்பங்களை சேர்ந்த 17,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 2321 பேர் உள்ளடங்குகின்றனர்.

வறட்சியான காலநிலையால் மேல் மாகாணத்தில் 2890 பேரும் தென் மாகாணத்தில் 7512 பேரும் மத்திய மாகாணத்தில் 1215 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் 469 குடும்பங்களை சேர்ந்த 1809 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வறட்சி தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 329 குடும்பங்களைச் சேர்ந்த 1324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.