பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்று இன்று (13) உயிரிழந்தார். அவரது வயது 83 ஆகும்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் மொத்தமாக 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் கோட்டா சீனிவாச ராவ் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

இவர் 2003ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படம் மெகாஹிட்டானது. அவரது வில்லன் கதாப்பத்திரமும் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் அவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய்யின் திருப்பாச்சி, சிம்புவின் குத்து, சரத்குமாரின் ஏய், ஜீவாவின் கோ, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில், அவர் உடல் நலக் குறைவால், தனது 83 வயதில் காலமானார். இவரது மறைவு தரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.









