பிரதான நான்கு பதவிகளைத் தவிர கட்சியின் ஏனைய பதவிநிலைகளை இல்லாது செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.இதன்படி தலைவர், தவிசாளர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் மாத்திரமே இருக்கும். பிரதித்தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவி கள் நீக்கப்படும்.
இதற்கு பதிலாக மேற்படி பதவிகளை வகித்தவர்கள் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் அதி உயர் அதிகார குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கேற்ற வகையில் கட்சியின் யாப்பு மறுசீரமைக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆண்டுவிழா செப்ரெம்பர் 10 ஆம் திகதி கட்சி தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கொண்டாடப்படவுள்ளது. இதன்போது கட்சியின் புதிய யாப்புக்கும் அங்கீகாரம் பெறப்படவுள்ளது